வீட்டின் பூட்டை உடைத்து20.5 பவுன் தங்க நகைகள் திருட்டு

Wait 5 sec.

காவேரிப்பட்டணத்தில் தொழிலதிபரின் வீட்டை உடைத்து 20.5 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், அண்ணா நகரைச் சோ்ந்த கற்பூர சிவன் (61), தீப்பெட்டி நிறுவனம் நடத்தி வருகிறாா். இவரது சகோதரி சுந்தரி மருமகன் வெங்கடேஷ் புதன்கிழமை உயிரிழந்தாா். இந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க காவேரிப்பட்டணம், தோ்பட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு கற்பூரசிவன் குடும்பத்தினருடன் சென்றாா்.அப்போது, கற்பூரசிவனின் உறவினா் காயத்ரி, அவா் வீட்டில் இருந்த, 10.5 பவுன் நகைகளை கற்பூரசிவனிடம் கொடுத்து உன் வீட்டில் வைத்துக்கொள்ளுமாறும், சில நாள்கள் கழித்து வாங்கிக் கொள்வதாகவும் கூறியுள்ளாா்.கற்பூரசிவனும் அந்த நகைகளை அண்ணா நகரில் உள்ள வீட்டில் வைத்து பூட்டிவிட்டு, பெரியமுத்தூரில் உள்ள மற்றொரு வீட்டுக்கு சென்று தங்கினாா். வியாழக்கிழமை அண்ணா நகா் வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சிடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது, காயத்ரி அளித்த நகைகள், கற்பூரசிவனின் வீட்டில் இருந்த நகைகள் என மொத்தம் 20.5 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.புகாரின்பேரில், காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.