மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி

Wait 5 sec.

மாணவர்கள் மீது தடியடி நடத்துவதும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசுவதும்தான் ஜனநாயகமா? என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூலை 20) கேள்வி எழுப்பியுள்ளார். தேர்வு வினாத்தாள்களை கசியவிட்ட குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவதாகவும், நியாயமான பிரச்னைகளை எழுப்பும் மாணவர்களோ கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டு, தாக்கப்படுவதாகவும் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக விடியோ வெளியிட்டு ராகுல் காந்தி பேசியதாவது:''இந்தியா அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களைக் கொண்டுள்ளது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்களுக்கு எதிரான தலைவராக உள்ளார். கல்வித் துறை வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என இளைஞர்கள் போராடுகிறார்கள். உரிமைகளுக்காக போராடும் இளைஞர்கள் மீது தடியடி நடத்துவதும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசுவதும்தான் ஜனநாயகமா?மாணவர்களின், இளைஞர்களின் கோரிக்கைகளை பிரதமர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களின் கோரிக்கைகளை மதிக்க வேண்டும். ஆனால் மோடி இளைஞர்களை அவமதிக்கிறார். இந்திய இறையாண்மைக்கு எதிரான கொள்கை உடைய கட்சியால் இவை நடக்கின்றன. 152 முறை வினாத்தாள்கள் கசிந்துள்ளன; இதனால், 7.5 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், குற்றவாளிகள் ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை. தண்டனை யாருக்குக் கிடைத்தது? கடினமாக உழைக்கும் இளைஞர்களுக்குத்தான்.மேலும், இந்த மாணவர்கள் கல்வி குறித்து நியாயமான கேள்விகளை எழுப்பியபோது, ​​அதற்குப் பதிலடியாக அவர்கள் தடியடிகளையும், சிறைக்காவலையும் எதிர்கொண்டனர். ஆவணங்களைக் கசியவிட்ட குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். நியாயமான பிரச்னைகளை எழுப்பும் மாணவர்களோ இழுத்துச் செல்லப்பட்டு, தாக்கப்படுகிறார்கள்.இந்த அரசாங்கம் இளைஞர்களைக் கைவிடுவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் மீது பாய்ந்து பிடிக்கவும் செய்கிறது'' என ராகுல் காந்தி குறிப்பிட்டார். प्रधानमंत्री मोदी भारत के इतिहास के सबसे युवा-विरोधी प्रधानमंत्री हैं - इतने युवा विरोधी कि एक नाकाम शिक्षा मंत्री धर्मेंद्र प्रधान का इस्तीफा भी नहीं ले सकते।152 पेपर लीक। 7.5 करोड़ छात्र पीड़ित। और सज़ा एक दोषी को भी नहीं। सजा किसे मिली? मेहनती युवाओं को।और जब इन बच्चों ने… pic.twitter.com/DbX5L4Iq5C— Rahul Gandhi (@RahulGandhi) July 20, 2026சிஜேபி போராட்டத்தில் தேசியக் கொடியை அவமதித்த காவலர்!Is lathi charging students democracy Rahul questions Prime Minister Modi