கர்நாடகத்தில் கொல்லூர் மூகாம்பிகை கோயிக்குச் சென்றது தனது தனிப்பட்ட உரிமை என கேரள முதல்வர் வி.டி. சதீசன் கூறியுள்ளார். கேரள முதல்வர் வி.டி. சதீசன் கடந்த சனிக்கிழமை (ஜூலை 11) கர்நாடகத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். இதையடுத்து, முதல்வர் சதீசன் மென்மையான ஹிந்துத்துவ கொள்கைகளைக் கொண்டுள்ளதாகவும், அரசு சர்வாதிகாரப் போக்குகளை வெளிப்படுத்தி வருகிறது எனவும் எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியிருந்தது. இந்த நிலையில், கேரள முதல்வர் சதீசன், கோயிலுக்குச் செல்வது தனது தனிப்பட்ட உரிமை எனவும், தன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனவும் கூறி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி, புதன்கிழமை (ஜூலை 15) திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது: “நான் மூகாம்பிகை கோயிலுக்குச் செல்வது எனது தனிப்பட்ட உரிமை. கடவுள் நம்பிக்கையைக் கொண்டிருப்பதற்கு எனக்கு அரசியலமைப்பின்படி உரிமையுள்ளது. அதை எப்படி மென்மையான ஹிந்துத்துவம் எனக் கூற முடியும்? நான் கடந்த 37 ஆண்டுகளாகத் தொடர்ந்து மூகாம்பிகை கோயிலுக்குச் செல்கிறேன். நான் கொல்லூர் மூகாம்பிகையின் பக்தன். அதைக் கூறுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.நான் முதல்வர் ஆகிவிட்டதால் கோயிலுக்குச் செல்லக் கூடாது என யாராவது சொல்ல முடியுமா? ” எனக் கூறியுள்ளார். முன்னதாக, கர்நாடகத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நேரில் சென்று வழிபாடு செய்ததுடன் வெள்ளி வாள் ஒன்றை காணிக்கையாக அளித்தது குறிப்பிடத்தக்கது.பிகார் இடைத்தேர்தல்! மூத்த நிர்வாகிகள் பாஜகவில் இணைந்ததால் பிரசாந்த் கிஷோருக்குப் பின்னடைவு!Kerala CM V.D. Satheesan has stated that his visit to the Kollur Mookambika Temple in Karnataka was his personal right.