2010 உலகக் கோப்பை லெஜண்டரி இனியெஸ்டாவை ஞாபகப்படுத்தும் டேனி ஓல்மோ!

Wait 5 sec.

ஸ்பெயின் அணியின் இளம் வீரர் டேனி ஓல்மோ (28 வயது) 2010 உலகக் கோப்பையில் பல வீரர்களுக்கு மத்தியில் தனியாளாக விளையாடிய இனியெஸ்டாவை போலவே விளையாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 2-0 என பிரான்ஸ் அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. கடைசியாக 2010ல் உலகக் கோப்பையை வெல்லும்போது ஸ்பெயின் இறுதிப் போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. டேனி ஓல்மோ அட்டாக்கிங் மிட்ஃபீல்டராக விளையாடுகிறார். இந்த உலகக் கோப்பையில் இரண்டு அசிஸ்ட், ஒரு கோல் அடித்துள்ளார். அதிலும் ஒரு அசிஸ்ட் அரையிறுதிப் போட்டியில் வந்ததும் கவனிக்கத்தக்கது. பிரான்ஸ் உடனான அரையிறுதிப் போட்டியில் நான்கு வீரர்களுக்கு மத்தியில் டேனி ஓல்மோ இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. காரணம் என்னவென்றால், 2010 உலகக் கோப்பையில் இனியெஸ்டாவும் இதேபோல் விளையாடி இருக்கிறார். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இனியெஸ்டா (42 வயது) 2010ல் உலகக் கோப்பை வென்ற அணியில் இருந்தார். அவரும் மிட்ஃபீல்டர். 2010ல் இத்தாலிக்கு எதிரான ஆட்டத்தில் அவரது புகைப்படம் மிகவும் புகழ்பெற்றது. இந்த இனியெஸ்டாவின் தருணத்தைத்தான் மீண்டும் டேனி ஓல்மோ நினைவூட்டியிருக்கிறார். சமூக வலைதளத்தில் ஸ்பெயின் அணி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். Dani Olmo just went full legend mode and recreated THAT iconic Iniesta moment to perfection ⚽️ Football poetry in motion. The torch has been passed! pic.twitter.com/5P1rHeWE5d— FIFA World Cup Stats (@alimo_philip) July 15, 2026உலகக் கோப்பையின் அழுத்தம் நீங்க ஒரு ஐஸ்கிரீம் போதும்..! இங்கிலாந்து பயிற்சியாளரின் பேட்டி!Dani Olmo evokes memories of the legendary Iniesta from the 2010 World Cup!