நான் எங்கும் ஓடி ஒளியவில்லை: செந்தில் பாலாஜி கடிதம்!

Wait 5 sec.

தமிழகத்தில் த.வெ.க ஆட்சியை கவிழ்க்க அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்களிடம் தி.மு.க நிர்வாகிகள் பேரம் பேசியாத த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜா புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் இதுவரை 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.இந்த வழக்கின் பின்னணியில் கோவை தெற்கு எம்.எல்.ஏ. செம்தில் பாலாஜியும் அவரது சகோதரர் அசோக்குமாரும் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரையும் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி திருவல்லிக்கேணி நீதிமன்றம் ஏற்கனவே சமன் அனுப்பியிருந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் பெற்ற இருவரும், நீதிமன்ற உத்தரவை மீறி 5 நாள்களைக் கடந்தும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து இந்த வழக்கு தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், “காவல்துறையினர் பதிவு செய்துள்ள வழக்கில் எனது பெயரோ, எனது சகோதரர் அசோக்குமாரின் பெயரோ முதல் தகவல் அறிக்கையில் இடம்பெறவில்லை. வழக்கில் பெயரே இல்லாத போது எங்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது ஏன்? எனவே, சட்ட நடைமுறைகளின்படி எனக்கு 35 க்ளாஸ் (3) பிஎன்எஸ் பிரிவின் கீழ் முறையான நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும்.இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்போது பழிவாங்கும் நோக்கில் என்னை வேறு எந்த வழக்கிலும் கைது செய்யக்கூடாது என உறுதியளிக்கவேண்டும். நான் ஒரு மக்கள் பிரதிநிதி மட்டுமல்ல. தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் தொழிலதிபர். சட்டத்திற்குப் பயந்து நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நான் கையெழுத்திடவோ விசாரணைக்கோ ஆஜராகையில், எனக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்து தர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.மேலும், “கரூரில் 41 பேர் பலியான விவகாரத்தில் ஆதவ் அர்ஜுனா உள்பட அமைச்சர்கள் சிலர் என்னைச் சம்பந்தப்படுத்தி மிரட்டும் தொனியில் பேசி வருகின்றனர். மேலும், அந்த விவகாரம் தொடர்பாக எனது ஆதரவாளர்களைக் கைது செய்தும் வருகின்றனர்” என்றும் தெரிவித்துள்ளார்.MLA Senthil Balaji has sent a letter to the Deputy Commissioner of Police, Triplicane.தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கு: மேலும் ஒருவா் கைது