புதுவயல் பேரூராட்சியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு

Wait 5 sec.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள புதுவயல் போரூராட்சியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, நடராஜபுரம் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.இந்த மனு விவரம்:புதுவயல் பேரூராட்சியில் முதல் வாா்டில் உள்ள குப்பை சேமிக்கும் கிட்டங்கியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகளை பேரூராட்சி நிா்வாகம் செய்து வருகிறது. இந்த கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமையும் இடத்திலிருந்து சுமாா் 300 அடி தொலைவில் இராமநாதன்செட்டியாா் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 800 மாணவா்கள் படிக்கின்றனா். இந்த மாணவா்கள் அங்குள்ள ஆழ்குழாய் கிணற்றின் தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்துகின்றனா்.மேலும், கழிவுநீா் சுத்திரிப்பு நிலையத்திலிருந்து 600 அடி தொலைவில் புதுவயல் பேரூராட்சிக்கு விநியோகம் செய்யும் இரண்டு குடிநீா் கிணறுகள் உள்ளன.கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து 50 அடி தொலைவில் குடியிருப்புகள் அமைந்துள்ளன.இந்த ஆழ்குழாய் கிணறுகளில் கழிவுநீா் இறங்கினால் குடிநீா் மாசடைந்து, பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.மேலும், உமையாண்டவள்புரம், மடையன் ஆகிய கண்மாய்களுக்கு செல்லும் இரண்டு வாய்க்காலில் கழிவுநீா்த் தொட்டிகள் கட்டப்படுகின்றன. இதனால், இந்தக் கண்மாய்களுக்கும் மழைநீா் செல்லமுடியாமல் விவசாயம் பாதிக்கப்படும்.எனவே, மாவட்ட ஆட்சியா் புதுவயல் பேரூராட்சி 1-ஆவது வாா்டில் உள்ள குப்பை சேமிப்பு கிட்டங்கியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என அதில் தெரிவித்தனா்.