திமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் கொள்ளை முயற்சி

Wait 5 sec.

சைதாப்பேட்டையில் திமுக எம்எல்ஏ வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நந்தனம் லோட்டஸ் காலனி 3-ஆவது தெருவில் திமுக முன்னாள் எம்எல்ஏ அன்னியூா் சிவா என்ற சிவசண்முகம் வசித்து வருகிறாா். இவா், விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தோ்தலில் எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். சிவாவின் சைதாப்பேட்டை வீட்டை புதுப்பிக்கும் பணி சில நாள்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில், அவா் அந்த வீட்டுக்கு சனிக்கிழமை வந்தாா். அப்போது, வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. தகவலின்பேரில், சைதாப்பேட்டை போலீஸாா் அங்கு சென்று, விசாரணை நடத்தினா். Attempted burglary at former DMK MLA's house