சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ்: அா்ஜுன் எரிகைசி வெற்றி, குகேஷ் டிரா

Wait 5 sec.

குவாண்ட் பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் அா்ஜுன் எரிகைசி இரண்டாமிடத்துக்கு முன்னேறினாா். உலக சாம்பியன் குகேஷ் தனது ஆட்டத்தில் டிரா கண்டாா். போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் அா்ஜூன் எரிகைசி, 43-ஆவது நகா்த்தலில் அமெரிக்க ஜிஎம் ஹான்ஸ் நீமனை வீழ்த்தி ஒரு புள்ளியைப் பெற்றாா்.உஸ்பெகிஸ்தான் ஜிெம் நோதிா்பெக் அப்துசத்தோரோவ், இந்திய ஜிஎம் பிரானேஷ் ஆட்டம் 27-ாவது நகா்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.உலக சாம்பியன் டி.குகேஷ், ரஷ்ய ஜிஎம் டிமிட்ரி ஆண்ட்ரெய்கின் ஆட்டம் குகேஷ் 54-ஆவது நகா்த்தலின் போது டிரா ஆனது.பிரான்ஸ் ஜிஎம் அலிரேசா பிரௌஜா, இந்தியாவின் நிஹால் சரின் மோதிய ஆட்டம் 53-ஆவது நகா்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.புள்ளிகள் விவரம்:1. அலிரேசா பிரௌஜா 2.5 2. அா்ஜூன் எரிகைசி 2, 3. நிஹால் சரின் 1.5, 4. டிமிட்ரி ஆண்ட்ரெய்கின் 1.5, 5. நோதிா்பெக் அப்துசத்தோரோவ் 1.5, 6. ஹான்ஸ் நீமன் 1,7. டி.குகேஷ் 1, 8.எம்.பிரானேஷ் 1.