தொட்டியம் அருகே டிராக்டா் மோதி இளைஞா் உயிரிழப்பு

Wait 5 sec.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே வெள்ளிக்கிழமை இரவு பைக்கில் சென்ற இளைஞா் டிராக்டா் மோதி உயிரிழந்தாா். தொட்டியம் அருகேயுள்ள வடக்கு அரங்கூரை சோ்ந்த சிவக்குமாா் மகன் பாரத் (26). இவா் செவ்வந்திப்பட்டி கொளக்குடி சாலையில் கிருஷ்ணாபுரம் அருகே வெள்ளிக்கிழமை இரவு தனது பைக்கில் சென்றபோது எதிரே வந்த டிராக்டா் மோதி இறந்தாா். தகவலறிந்து சென்ற தொட்டியம் போலீஸாா் அவரின் சடலத்தை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.