திருப்பூர் அருகே கார் - லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலி, 5 பேர் காயம்

Wait 5 sec.

திருப்பூர்: செங்கப்பள்ளி அருகே கேஸ் டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர், 5 பேர் காயமடைந்தனர்.திருப்பூர் மாவட்டம், செங்கப்பள்ளி அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணியில் இருந்து ஊட்டி நோக்கி சுற்றுலா சென்றுகொண்டிருந்த இகோ கார், கேஸ் டேங்கர் லாரியை முந்த முயன்றபோது கேஸ் டேங்கர் லாரி காரின் பின்னே பலமாக மோதியதில் முன்னே சென்று கொண்டிருந்த மற்றொரு லாரியில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் இருந்த 4 ஆண்கள், 4 பெண்கள் என 8 பேரில் இரண்டு ஆண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலத்த காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இரண்டு பேர் ஊத்துக்குளி அரசு மருத்துவமனையிலும், மூன்று பேர் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் விஜய் (30), அவரது மனைவி தேன்மொழி (26), குமார் (36) ஆகியோர் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடல் உடல்கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.3 killed, 5 injured in car-lorry collision near Tiruppurஇந்தியாவுக்கு கருத்து தெரிவிக்க பாகிஸ்தானுக்கு எந்த தகுதியும் இல்லை: வெளியுறவு அமைச்சகம்