கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் காலவரையற்ற உண்ணாவிரதம்!

Wait 5 sec.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிரான போராட்டத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே அறிவித்துள்ளார்.நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட காரணங்களுக்காக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி அபிஜித் திப்கே தலைமையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஜூன் 20 ஆம் தேதியில் தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தைத் தொடங்கினர்.இந்த நிலையில், போராட்டத்தின் தொடர்ச்சியாக காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அபிஜித் அறிவித்துள்ளார்.இதுகுறித்து, ஆதரவாளர்களிடையே அவர் பேசியதாவது, இன்று முதல் எனது காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்குகிறேன். போராட்டத்திலிருந்து யாரும் பின்வாங்க வேண்டாம் என அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். அவர்கள் (மத்திய அரசு) பெரிய தவறு செய்துள்ளனர். இந்த இயக்கம் இன்னும் பெரிதாக வளர வேண்டும். அனைவரும் ஜந்தர் மந்தருக்கு வருமாறு கேட்டுக் கொள்கிறேன்.திட்டமிட்டபடி, ஜூலை 20 ஆம் தேதியில் எங்கள் பேரணி நடைபெறும் என்று தெரிவித்தார்.அபிஜித் திப்கேமுன்னதாக, இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், 21 நாள்களாகத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்த நிலையில், அவரை இன்று காலையில் தில்லி காவல்துறையினர் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.இந்த நிலையில், அபிஜித்தும் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.21 நாள்கள் தொடர் உண்ணாவிரதம்! வாங்சுக் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிCJP Founder Abhijeet Dipke sits on indefinite hunger strike now