தமிழ்நாடு நாளையொட்டி முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு நாளையொட்டி, மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து கூறியிருப்பதாவது,1956-ஆம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரிலேயே தொடர்ந்தது.எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை.தமிழ்நாடு நாள் 1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது திமுக. முதலவரானார் நம் அண்ணா. வரலாற்றில் பொன்னாளாக நிலைபெற வந்தது அந்நாள்!தமிழ்த்தாயின் ஏக்கம் தீரத் தலைமகன் பேரறிஞர் அண்ணா 'தமிழ்நாடு' என்ற பெயரினை அவையினில் முழங்க, ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வினையும் எதிரொலிக்கும் வகையில் உறுப்பினர்கள் எல்லாம் 'வாழ்க' என வாழ்த்தி மகிழ்ந்த இந்த நாளே தமிழ்நாடு நாள்! என கூறியுள்ளார்.