பீலே ஜெர்ஸி ரூ.47 கோடிக்கு ஏலம்

Wait 5 sec.

பிரேஸில் கால்பந்து அணி முதல்முறையாக உலகக் கோப்பை வென்றபோது (1958), அதன் நட்சத்திர வீரர் பீலே அணிந்திருந்த ஜெர்ஸி (எண் 10), தற்போது ரூ.47 கோடிக்கு நியூயார்க்கில் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்வீடனில் நடைபெற்ற அந்தப் போட்டியில் பிரேஸில் 5-2 கோல் கணக்கில் ஸ்வீடனை வீழ்த்திய இறுதி ஆட்டத்தில், 17 வயது பீலே 2 கோல்கள் அடித்தார். உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் கோல் அடித்த இளம் வீரர் என்ற சாதனை, இன்றளவும் அவர் வசமே உள்ளது. பீலே 2022-இல் தனது 82 வயதில் காலமானார். கால்பந்து உலகில் 2-ஆவது அதிகபட்ச விலைக்கு ஏலம் போன ஜெர்ஸி பீலே உடையது ஆகும். ஆர்ஜென்டீன ஜாம்பவான் டியேகோ மாரடோனாவின் 'ஹேண்ட் ஆஃப் காட்' ஜெர்ஸி கடந்த 2022-இல் ரூ.89 கோடிக்கு ஏலம் போனதே அதிகபட்சமாக இன்றளவும் நீடிக்கிறது.