திருப்பூரில் குடியிருப்புப் பகுதியில் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 500 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரைக் கைது செய்தனா். திருப்பூா் மாநகா், இடுவம்பாளையத்தில் குடியிருப்புப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, அப்பகுதியில் வீரபாண்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அருண் என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, துணிகளுக்கு இடையிலும், பிளாஸ்டிக் கூடைகளிலும் 500 கஞ்சா பொட்டலங்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அருணைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.