அரசு வழக்குரைஞர் நியமனத்திற்கு லஞ்சம் கேட்பதாக வழக்கு தொடர்ந்த வழக்குரைஞர் ஞானசௌந்தரி தவெகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அரசு வழக்குரைஞர் நியமனத்திற்கு லஞ்சம் கேட்பதாக அமைச்சர் ஆனந்த் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குரைஞருமான ஞானசௌந்தரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், தவெகவில் இருந்து அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஞானசௌந்தரி நீக்கப்பட்டுள்ளார். தவெக வழக்குரைஞர் ஞானசௌந்தரி நீக்கம்! தவெக உறுப்பினராக இணையவழி முறையின் மூலமாக உறுப்பினராக இணைந்துள்ள சந்திரமோகன் மனைவி எம்.ஞானசௌந்தரி எதிரிகளுடன் சேர்ந்துகொண்டு பொய்யான குற்றச்சாட்டுகள் கூறியும், கட்சியின் கொள்கைகள், ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதால் தவெகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்படுகிறார். மேலும், கட்சியின் எந்த நிர்வாகியும் அல்லது உறுப்பினரும் கட்சி சார்பில் இன்று முதல் அவருடன் எந்தவித கட்சி தொடர்போ, ஒத்துழைப்போ வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.TVK lawyer Gnanasoundari removed after filing a case against Minister Anand...தங்கம் விலை உயர்வு, வெள்ளி விலை?- ஜூலை 18 நிலவரம்!