வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் ரியோ நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். சிவகார்த்திகேயனின் சினிமா பயணத்தில் முக்கிய இடம்பிடித்த இப்படம், அவருக்கு பெரியலவிளான கமர்ஷியல் வெற்றியைப் பெற்றுத் தந்தது. கிராமத்துப் பின்னணியில் காமெடி கதைக்களத்தில் வெளியான இப்படத்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வருத்தப்படாத வாலிபர் சங்கம் - 2 படத்தை நடிகர் ரியோ தயாரித்து கதாநாயகனாக நடிப்பதாகவும், முதல் பாகத்தை இயக்கிய பொன்ராம் இப்பாகத்தையும் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. ரியோ நடித்து கடைசியாக வெளியான ஆண் பாவம் பொல்லாதது படம் வெற்றிபெற்ற நிலையில், தற்போது ராம் லீலா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. சொந்தமாக ரிவர்ரூட் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ள ரியோ முதல் படமாக ‘பிரவுன் மணி’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார்.Reports indicate that actor Rio will be starring in the sequel to the movie Varuthapadatha Valibar Sangamகட்டா குஸ்தி 2 ரொம்ப ஜாலியான செம்ம படம்... ரஜினி பாராட்டு!