புதுதில்லி: ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் ஜூன் காலாண்டு வருவாய் முடிவுகள் முதலீட்டாளர்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இல்லாததால் நிறுவனத்தின் பங்குகள் 4 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்து, அதன் சந்தை மதிப்பு ரூ. 14,653.78 கோடி குறைந்தது.மும்பை பங்குச் சந்தையில், இந்த பங்கு 4.42 சதவீதம் சரிந்து ரூ. 1,167ஆக நிலைபெற்றது. வர்த்தகத்தின் போது, இந்த பங்கு 4.66 சதவீதம் சரிந்து ரூ. 1,164 வரை சென்ற நிலையில், நிஃப்டி-யில் இந்த பங்கு 4.46 சதவீதம் சரிந்து ரூ. 1,166.70 ஆக நிறைவடைந்தது.இதனையடுத்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 14,653.78 கோடி குறைந்து ரூ. 3,16,684.72 கோடியாக சரிந்தது.ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் ஜூன் காலாண்டு சிறப்பான முடிவுகளை வெளியிட்டது. சிறப்பான செயல்பாட்டின் காரணமாக நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 20 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து ரூ. 4,624 கோடியாக இருந்தது.முதல் காலாண்டில் சாதனை அளவாக 2.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக நிறுவனம் தெரிவித்தது. இதற்கிடையில், இந்தியாவில் தரவு மையங்களை அமைப்பதற்காக ரூ. 3,500 கோடி வரையிலான முதலீட்டிற்கும் ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு மூலம் வந்த வருவாய் 14 சதவீதம் அதிகரித்து ரூ. 34,579 கோடியாக இருந்தது.Shares of HCL Technologies dropped over 4 per cent on Tuesday.கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!