சிறையில் விசாரணைக் கைதி மரணம்: 3 பேர் கைது

Wait 5 sec.

நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதி சபரிவர்மன் உயிரிழந்த விவகாரத்தில் வார்டன் உள்பட 3 காவலர்கள் இன்று (ஜூலை 14) கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட நீதிபதி முன்னிலையில் நடந்த உடற்கூராய்வில் சபரிவர்மன் உடலில் 19 காயங்கள் இருந்துள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குட்கா வழக்கில் கைது செய்து சிறையிலடைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சபரிவர்மன் நீதிமன்றக் காவலில் சிறையிலிருக்கும்போதே உயிரிழந்துள்ளார். கைது செய்தபோது ஆரோக்கியமாக இருந்ததாகவும், சிறையில் அடைத்தபோது உடல்நலக் குறைவால் இறந்துவிட்டதாகவும் காவல் துறை தரப்பில் தெரிக்கப்பட்டுள்ளது. மரணமடைந்த சபரிவர்மனின் உடலில் காயங்கள் இருப்பதாகவும் அவரை மாற்றுத் திறனாளி என்றும் பாராமல் காவல்துறையினர் அடித்தே கொலை செய்துள்ளதாகவும் சபரிவர்மனின் குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் மாவட்ட நீதிபதி முனிடையில் இன்று உடற்கூராய்வு நடத்தப்பட்டது. அதில், சபரிவர்மன் உடலில் 19 காயங்கள் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.இதனைத் தொடர்ந்து மாவட்ட சிறை தலைமை வார்டன் ஜெகன், சிவகுமார், திருவிடைநம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கவுள்ளனர்.உறவினர்களுக்கு கோயில் நிலத்தை பத்திரப் பதிவு செய்தேனா? அமைச்சர் ரமேஷ் விளக்கம்!Death of undertrial prisoner: 3 arrested, including prison warden