நடிகர் சூரியின் அட்டகாசமான நடனம்! மாண்டாடி பாடல் வெளியீடு!

Wait 5 sec.

நடிகர் சூரி நடிப்பில் உருவான மண்டாடி திரைப்படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது.தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களுள் ஒருவராகயிருந்த நடிகர் சூரி, கடந்த சில ஆண்டுகளாகக் கதாநாயகனாக நடித்து வருகிறார். வணிக ரீதியாகவும் சில கோடிகளையும் ஈட்டும் நடிகராக மாறிவிட்டதால் பெரிய தயாரிப்பு நிறுவனங்களும் சூரியை வைத்து தயாரிக்க ஆர்வம் காட்டி வருகின்றன. தற்போது, சூரி நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் “மண்டாடி”. இப்படத்தை, இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். நாகை பகுதி மீனவர்களின் வாழ்வியலையும் அங்கு நடைபெறும் படகுப் போட்டிகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில், ‘மண்டாடி மண்டாடி’ என்கிற பாடலை வெளியிட்டுள்ளனர். வகீசன் ராசய்யா எழுதிய இப்பாடலை அவரும் வி.எம். மகாலிங்கமும் இணைந்து பாடியுள்ளனர். மேலும், இதில் நடிகர் சூரி மிகச்சிறப்பாக நடனமாடியுள்ளதால் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். A new song from the movie Mandadi, starring actor Soori, has been released.