இன்றைய செய்திகள் ஜூலை 16 -நேரலை

Wait 5 sec.

பங்குச்சந்தை உயர்வுபங்குச்சந்தைகள் தொடர்ந்து 2-ம் நாளாக இன்று (ஜூலை 16) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகின்றன.பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் உயர்வு! கரூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்துகரூர் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், 9 மணிநேரத்துக்கும் மேலாக தீயணைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கரூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து! 9 மணிநேரமாக நீடிக்கும் தீயணைப்புப் பணிஆதவ் அர்ஜுனா - அன்புமணிதமிழ்நாடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் இணைந்து இன்று காலை பேட்மிண்டன் விளையாடினர்.பேட்மிண்டன் விளையாடிய ஆதவ் அர்ஜுனா - அன்புமணி!8 மின்சார ரயில்கள் ரத்துசென்னையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூலை 17) 8 மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதில் 8 பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ரயில் பயணிகள் கவனத்திற்கு... சென்னையில் நாளை(ஜூலை 17) 8 மின்சார ரயில்கள் முழுமையாக ரத்துஅமைச்சரவைக் கூட்டம் தொடங்கியதுதமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் சி. ஜோசப் விஜய் தலைமையில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் நீக்கம்அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புதங்கம் விலை குறைவுசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை (ஜூலை 16) சவரனுக்கு ரூ. 240 குறைந்துள்ளது.தங்கம் விலை குறைவு! வெள்ளி விலை? ஜூலை 16 நிலவரம்!காய்ச்சல் மருந்துகளில் ஆல்கஹால்?தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் பாராசிட்டமால் மருந்துகளில் ஆல்கஹாலின் அளவு குறித்த குற்றச்சாட்டுக்கு தமிழக சுகாதாரத் துறை மறுப்பு தெரிவித்துள்ளது.குழந்தைகளுக்கான காய்ச்சல் மருந்துகளில் ஆல்கஹால்?பாஜகவோடு திமுக நாளையே கைகோக்கலாம்பாஜகவோடு திமுக நாளையே கைகோக்கும் நிலை வரலாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.பாஜகவோடு திமுக நாளையே கைகோக்கலாம் தொல். திருமாவளவன்தமிழகத்துக்கு காவிரி நீர் கிடையாதுதமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட முடியாது என காவிரிநீர் ஒழுங்குமுறைக் கூட்டத்தில் கர்நாடக அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.தமிழகத்துக்கு காவிரி நீர் கிடையாது: கர்நாடகம்தவெக ஊராட்சி மன்றத் தலைவா் கைதுஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கியதாக தவெகவில் இருந்து நீக்கப்பட்ட மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் வீரா(எ) வீராசாமி கைது செய்யப்பட்டாா்.லஞ்சம்: தவெகவில் இருந்து நீக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா் கைது