நடிகை வரலட்சுமி தன் கணவருடன் இணைந்து முதல்வர் விஜய்யைச் சந்தித்துள்ளார். நடிகை வரலட்சுமி தன் கணவர் நிகோலய் சச்தேவ் உடன் முதல்வர் விஜய்யைச் நேரில் சந்தித்துள்ளார். இதுகுறித்து வரலட்சுமி வெளியிட்ட பதிவில், ”ஒருவேளை மக்கள் 100 வித்தியாசமான விஷயங்களைச் சொல்லலாம். ஆனால் இறுதியில் சி. ஜோசஃப் விஜய் என்பவர் நம் முதல்வர்தான். விமர்சிப்பது மிக எளிதானது. ஆனால், தன் முதல் முயற்சியிலேயே முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தைரியம், மன உறுதி, தமிழக மக்களின் பேரன்பு ஆகியவற்றைப் பெற்றால்தான் சாத்தியம். வார்த்தைகளைவிட செயலே வலிமை மிக்கது. இந்தப் பதவியின் பொறுப்பிற்கு மரியாதை அளிப்போம். Thalapathy..!!I pondered over what to say about this post but then I realised so much has been said already..so just wanted to say one thing..People may say a 100 different things..But at the end of the day ..C.Joseph Vijay is our Chief Minister And he’s here to stay..!!… pic.twitter.com/oOP6YT6Iso— (@varusarath5) July 16, 2026 எப்போதும் குறை கூறிக் கொண்டிருப்பவர்களுக்கு, காலமே உண்மையை வெளிக்கொண்டு வரும். அதுவரை, அவர் என்ன சாதிக்கப் போகிறார் என்பதைப் பார்க்க, கொஞ்சம் பொறுமையுடனும், மரியாதையுடனும், ஊக்கத்துடனும் இருப்போம். நான் பெண்கள் நலன் சார்ந்து சில விஷயங்களை அவருடன் பகிர்ந்துகொண்டேன். ஐ லவ் யூ சார்... என்றும், என்றென்றும் ‘விஜய் வெறியன்’தான். எங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கி அன்பைப் பகிர்ந்ததற்கு நன்றி.” எனத் தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய்யின் தீவிர ரசிகையான வரலட்சுமி அவருடன் இணைந்து சர்க்கார் திரைப்படத்தில் முக்கியமான அரசியல் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சில பயணங்கள் அசாதாரணமானவை! - முதல்வர் விஜய்யுடன் நடிகர் சிவகார்த்திகேயன் சந்திப்பு! Actress Varalaxmi met Chief Minister Vijay along with her husband.