தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் சி. ஜோசப் விஜய் தலைமையில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.தமிழ்நாடு சட்டப்பேரவையில் விரைவில் முழு நிதிநிலை அறிக்கையை தவெக அரசு தாக்கல் செய்யவுள்ளது. அதற்கு முன்னதாக, முதல்வா் விஜய் துறைவாரியாக ஆய்வுக் கூட்டத்தை நடத்தி வருகிறாா்.இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.இந்தக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை குறித்தும் புதிதாக தொழில் தொடங்கவுள்ள நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.கடந்த மே 10-ஆம் தேதி முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.A cabinet meeting led by Chief Minister Vijay has begun!பாஜகவோடு திமுக நாளையே கைகோக்கலாம் தொல். திருமாவளவன்