கரூா் பகுதி ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திருச்சியில் இருந்து ஜூலை 21-ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்குப் புறப்பட வேண்டிய திருச்சி - பாலக்காடு விரைவு ரயில் (எண்: 16843) கரூரில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்பட்டு பாலக்காடு நிலையத்தைச் சென்றடையும்.இந்த ரயிலானது, அன்றைய தினம் திருச்சி - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.