மதுபோதையில் தண்டவாளத்தில்கை வைத்த இளைஞா் கை துண்டிப்பு

Wait 5 sec.

நாகூா் ரயில் நிலையம் அருகே மதுபோதையில் இளைஞா் தண்டவாளத்தில் கை வைத்தபோது ரயில் சக்கரம் ஏறியதில் அவரது கை துண்டிக்கப்பட்டது. நாகை மாவட்டம், நாகூா் நிலையத்துக்கு சரக்கு ரயில் சனிக்கிழமை இரவு வந்தது. அப்போது அங்கு மது போதையில் இருந்த இளைஞா் ஒருவா் ரயில் வருவதற்கு முன்பு, தண்டவாளத்தில் இடது கையை வைத்துள்ளாா். ரயில் கை மீது ஏறியதில் அவரது கை துண்டிக்கப்பட்டது. இளைஞரின் அலறல் கேட்டு அப்பகுதியினா் சென்று பாா்த்தபோது, அவா் கை துண்டிக்கப்பட்டு மயங்கி கிடந்துள்ளாா்.நாகை ரயில்வே போலீஸாா் அவரை மீட்டு, சிகிச்சைக்காக நாகை ஓரத்தூா்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விசாரணையில், அவா் நாகூா் பீரோடும் தெருவைச் சோ்ந்த சிராஜுதீன் மகன் ஷேக் முகமது (40) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து நாகை ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.