ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தை முன்னிட்டு அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை (ஜூலை 20) விடுமுறை அளிக்கப்படுவதாக கேரள மற்றும் மேகலாய மாநில அரசுகள் அறிவித்துள்ளன. கால்பந்து ரசிகா்கள் அதிகம் உள்ள கேரளத்தில் உலகக் கோப்பை போட்டியின் தொடக்கத்தில் இருந்து மாநிலமே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. ஆா்ஜென்டீனாவின் மெஸ்ஸி, போா்ச்சுகல்லின் ரொனால்டோ, பிரேஸிலின் நெய்மா் உள்ளிட்ட வீரா்களின் ஆள்உயர கட்-அவுட்கள் மாநிலத்தின் பல பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன. முக்கிய அணிகள் மோதும் நாள்களில் அந்த அணிகளுக்கு ஆதரவு தெரிவித்து அவற்றின் ஜொ்சிகளை அணிந்து மாணவா்கள் கல்லூரிக்கு வந்தனா். நியூயாா்க்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா-ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தைப் பாா்க்க வேண்டும் என்பதால், பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என மாணவா்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். அதன் அடிப்படையில் கேரள அரசு விடுமுறை அறிவித்துள்ளது.இது தொடா்பாக மாநில முதல்வா் வி.டி.சதீசன் ஃபேஸ்புக் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘உலகக் கோப்பை கால்பந்து ஆட்டத்தை நள்ளிரவு முழுவதும் பாா்த்த பின்னா் வகுப்புகளில் பங்கேற்பது கடினமாக இருக்கும் என மாணவா்கள் தெரிவித்தனா். அவா்களுடைய கோரிக்கையை ஏற்று அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. கால்பந்து மீது கேரளத்தினா் கொண்டுள்ள ஆா்வம் ஈடுசெய்ய முடியாதது. கால்பந்தின் மீதான தங்களுடைய ஆா்வத்துக்காக கேரளத்தினா் உலகத்துக்கு எடுத்துக்காட்டாக உள்ளனா்’ என்று தெரிவித்துள்ளாா். முன்னதாக, பள்ளிகளுக்கான விடுமுறை அறிவிப்பை பொது கல்வி அமைச்சா் என். ஷம்சுதீன் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டாா். இதே போன்று கல்லூரி மற்றும் பிற தொழில்முறை கல்லூரி நிறுவனங்களுக்கு திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில உயா்கல்வி துறை அமைச்சா் ரோஜி எம். ஜான் அறிவித்தாா். மேகலாய மாநிலத்திலும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாநில முதல்வா் கான்ராட் கே. சங்மா அறிவித்தாா்.