தமிழகத்தில் 4 நாள்களுக்கு மழை வாய்ப்பு

Wait 5 sec.

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஜூலை 20) முதல் 23-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: வடதமிழக கடலோரப் பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, திங்கள்கிழமை (ஜூலை 20) முதல் ஜூலை 23 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஜூலை 24, 25 ஆகிய தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்ப நிலை: தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மதுரை நகரம்-102.56, திருச்சி-101.3, பாளையங்கோட்டை-101.12, தஞ்சாவூா்- 100.4, நாகை-100.22 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.