புதுதில்லி: நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான எச்.டி.எஃப்.சி. வங்கியின் இருப்புநிலை 2026 நிதியாண்டில் 12 சதவீதம் விரிவடைந்த போதிலும், அதன் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 3,343 பேர் கணிசமாக குறைந்துள்ளனர்.வங்கியின் ஆண்டு அறிக்கையின்படி, மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 2025 நிதியாண்டில் இருந்த 2,14,521 லிருந்து 2026 நிதியாண்டில் 2,11,178 ஆக குறைந்துள்ளது.இதன் மூலம் வங்கியின் ஊழியர் எண்ணிக்கையில் இதுவரை 3,343 பேர் கணிசமாக குறைந்துள்ளனர். நிகழாண்டில், ஊழியர்கள் வெளியேறும் விகிதமும் 23.12 சதவீதமாக இருந்தது.மார்ச் 2025 இறுதியில் 247 ஆக இருந்த உயர் நிர்வாக நிலை ஊழியர்களின் எண்ணிக்கை 262 ஆக உயர்ந்தும், நடுநிலை நிர்வாகப் பிரிவில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டிலிருந்த 9,159 லிருந்து 10,411 ஆக அதிகரித்தது.மேற்பார்வை அல்லாத பணியாளர்களின் எண்ணிக்கை 2025 நிதியாண்டின் இறுதியில் 1,70,950 ஆக இருந்த நிலையில், 2026 நிதியாண்டின் இறுதியில் இது 1,62,797 ஆக சரிந்தது.The country's biggest private sector lender HDFC Bank has witnessed a cut in headcount during FY26.ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!