லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் வசனத்துக்காக இயக்குநர் வெங்கி அட்லூரி தேசிய விருது வென்று அசத்தியுள்ளார். இதுதான் அவரது முதல் தேசிய விருது என்பதும் குறிப்பிடத்தக்கது. 2024ல் வெளியான இந்திய திரைப்படங்களுக்கான 72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் இயக்குநர் வெங்கி அட்லூரி விருது பெற்றுள்ளார். வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி செளதரி, ராம்கி ஆகியோர் நடித்த லக்கி பாக்ஸர் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 2024ல் வெளியாகியது. வங்கியில் பணிபுரியும் அதிகாரியான பாஸ்கர் (துல்கர் சல்மான்) பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசையில் அரசை, வங்கி நிர்வாகத்தை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார் என்கிற கதையாக உருவான இப்படம் இந்தியளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது.தெலுங்கு படமான லக்கி பாஸ்கர் தமிழ், மலையாளம், ஹிந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது. துல்கர் சல்மான் தமிழ், மலையாளம் மொழிகளில் டப்பிங் செய்திருந்தார். இந்தப் படத்தில் வரும் வசனங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வங்கியில் அவமானப்பட்டதும் துல்கர் சல்மான் பேசும் வசனங்கள் இன்றளவும் இன்ஸ்டா ரீல்ஸ்களில் வலம்வந்துகொண்டிருக்கின்றன. From creating an unforgettable story to earning the nation’s highest recognition… this is truly special! ❤️Congratulations to our Director #VenkyAtluri garu on winning the 72nd National Film Award for Best Screenplay - Dialogue Writer for #LuckyBaskhar A proud moment for… pic.twitter.com/Dbar4wlsnZ— Sithara Entertainments (@SitharaEnts) July 18, 2026National Award Best Dialogue Writer: Lucky Baskhar Venky Atluri