அமரன் படத்துக்கு 3 தேசிய விருதுகள் அறிவிப்பு

Wait 5 sec.

சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்துக்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த இயக்குநருக்கான விருது ராஜ்குமார் பெரியசாமி, சிறந்த பின்னணி இசைக்கான விருது ஜி.வி.பிரகாஷ் குமார், சிறந்த படத்தொகுப்புக்கான விருது ஆர். கலைவண்ணனுக்கு கிடைத்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'அமரன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாக 2024ஆம் அண்டு அக்டோபர் 31ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரித்திருந்தார். மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். உலகளவில் இத்திரைப்படம் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. மேலும் இப்படம் ஓ.டி.டி.யிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்துக்கு தேசிய விருதுகளும் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 3 National Awards have been announced for the movie Amaran starring Sivakarthikeyan.தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு!