சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருது ஸ்ட்ரீ 2 படத்தில் நடிகை தமன்னா ஆடிய பாடலுக்கு நடனம் அமைத்த மாஸ்டர் விஜய் கங்குலி வென்றுள்ளார். 2024ல் வெளியான இந்திய திரைப்படங்களுக்கான 72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் சிறந்த நடன இயக்குநராக விஜய் கங்குலி வென்றுள்ளார்.ஸ்ட்ரீ படத்தின் இரண்டாம் பாகம் (ஸ்ட்ரீ 2) 2024 ஆகஸ்ட்டில் வெளியாகியது. இந்தப் படத்தில் ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர். பங்கஜ் திரிப்பாதி, அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.இந்தப் படத்தை அமர் கௌசிக் இயக்க ஜியோ ஸ்டுடியோஸும் மட்டோக் பிலிம்ஸும் இணைந்து தயாரித்திருந்தது. இந்தப் படம் ரூ.800 கோடி வசூலித்து அசத்தியது.இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் தமன்னா நடனமாடிய ஆஜ் கி ராட் (Aaj Ki Raat) எனும் பாடல் விடியோவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்தப் பாடம் யூடியூப்பில் மட்டுமே 105 கோடி பார்வைகளைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடலில் சிறப்பான நடனத்தை அமைத்ததுக்காக மாஸ்டர் விஜய் கங்குலிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ️️Best Choreography: Stree-2 (Aaj Ki Raat) Hindi #NationalFilmAwards @MIB_India @nfdcindia pic.twitter.com/jStValyodz— All India Radio News (@airnewsalerts) July 18, 2026National award for Best Choreography: Tamannaah Bhatia dance in Stree 2