மெய்யழகன் படத்துக்கு சிறந்த ஒலிக்கலவைக்காக தேசிய விருது!

Wait 5 sec.

மெய்யழகன் திரைப்படத்தில் சிறந்த பின்னணி ஒலிக்கலவைக்காக (Best Sound Mixing) சுரேன் ஜி என்பவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான மெய்யழகன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் பல்வேறு பிரபலங்களால் பாராட்டப்பெற்றது.96 திரைப்படத்தை இயக்கிய சி. பிரேம் குமார் இப்படத்தை இயக்க நடிகர்கள் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இந்த நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 72 வது தேசிய விருதுகள் பட்டியலில் மெய்யழகன் திரைப்படத்தில் பணியாற்றிய சுரேன் ஜி என்பவருக்கு சிறந்த பின்னணி ஒலிக்கலவைக்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு!A National Award for the movie Meiyazhagan!