3-வது ஒருநாள்: வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக மாற்று வீரர் சேர்ப்பு!

Wait 5 sec.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக விலகியுள்ள வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக மாற்று வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லார்ட்ஸ் திடலில் நாளை (ஜூலை 19) நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருப்பதால், தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. News Harsh Dubey added to #TeamIndia's ODI squad as a replacement for injured Washington Sundar.More Details | #ENGvINDhttps://t.co/Y6LgzTJAyS— BCCI (@BCCI) July 18, 2026இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலிருந்து ஆல்ரவுண்டர் வாஷிங்டர் சுந்தர் காயம் காரணமாக விலகினார். இந்த நிலையில், அவருக்கு மாற்று வீரராக ஹர்ஷ் துபே ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.ஒருநாள் தொடருக்கு முன்பாக, இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிய இந்திய அணி அந்த தொடரை 0-4 என்ற கணக்கில் இழந்தது. டி20 தொடரை இழந்த நிலையில், ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.A replacement player has been named for Washington Sundar, who has withdrawn from the third ODI against England due to injury.தடையிலிருந்து தப்பிய பாகிஸ்தான் வீரர்... ஊக்க மருந்து சோதனையில் சிக்காதது எப்படி?