மகாராஜா படத்துக்கு 2 தேசிய விருதுகள்

Wait 5 sec.

விஜய்சேதுபதியின் மகாராஜா படத்துக்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. 72ஆவது தேசிய விருதுகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன. அதில், விஜய்சேதுபதியின் மகாராஜா திரைப்படம் 2 தேசிய விருதுகளை வென்று அசத்தியுள்ளது. சிறந்த துணை நடிகை பிரிவில் சச்சனா நமிதாஸும், சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான பிரிவில் அனல் அரசும் இவ்விருதினை வென்றுள்ளனர். நடிகர் விஜய் சேதுபதியின் 50ஆவது திரைப்படமாக வெளிவந்த திரைப்படம்தான் மகாராஜா. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஒரு குப்பைத்தொட்டியை கருப்பொருளாக கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இணைந்து படத்தை தயாரித்து இருந்தனர். படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருந்தார். படத்தில், விஜய் சேதுபதியுடன் பாரதிராஜா, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி நட்ராஜ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பாக்ஸ் ஆஃபிஸில் 100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்த இப்படம், ஓடிடியிலும் வெளியாகி பெரும்பாலோனோரின் விருப்பத் திரைப்படமாக அமைந்திருந்தது. மேலும் சீனாவில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட மகாராஜா திரைப்படம் அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.Vijay Sethupathi's Maharaja movie has received 2 National Awards.அமரன் படத்துக்கு 3 தேசிய விருதுகள் அறிவிப்பு