தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு: பொதுமக்கள் தங்களது சுய விவரங்களை பதிவேற்றலாம்

Wait 5 sec.

தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகளில் பொதுமக்கள் தாங்களாகவே தங்களது இணையதளம் வாயிலாக சுய விவரங்களை பதிவேற்றம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகளில் பொதுமக்கள் தாங்களாகவே தங்களது சுயவிவரங்களை பதிவேற்றம் செய்ய ஏதுவாக பிரத்யேகமாக உருவாக்கப் பட்டுள்ள இணையதளம் வாயிலாகவும், கியூஆா் கோடு மூலமாகவும், சுயவிவரங்களைப் பதிவேற்றம் செய்யலாம். இதை 17.7.2026 முதல் 31.7.2026 வரை 15 நாட்களுக்கு மட்டுமே பதிவு செய்யலாம். எனவே, நாட்டின் வளா்ச்சிப் பணிகளுக்காக பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது சுயவிவரங்களை பதிவு செய்திட வேண்டும்.