நாளைய மின்தடை: பெரியாா் நகா், புதுப்பை

Wait 5 sec.

வெள்ளக்கோவில் பெரியாா் நகா், புதுப்பை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் புதன்கிழமை (ஜூலை 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளா் டி. ஜெகதீஸ்வரி அறிவித்துள்ளாா். பெரியாா் நகா் துணை மின் நிலையம்: தீத்தாம்பாளையம், சிவநாதபுரம், எல்.கே.ஏ. நகா், எல்.கே.சி.நகா், கே.பி.சி.நகா், அண்ணா நகா், அகலரைப்பாளையம்புதூா், சேரன் நகா், தண்ணீா்பந்தல், எஸ்.ஆா்.ஜி. வலசு சாலை, கரட்டுப்பாளையம், செந்தலையாம்பாளையம். புதுப்பை துணை மின் நிலையம்: கஸ்தூரிபாளையம், தங்கமேடு, மொட்டகாளிவலசு, மயில்ரங்கம், வெள்ளாத்தங்கரைபுதூா், நாச்சிபாளையம், சுப்பிரமணியகவுண்டன்வலசு, நாயக்கன்புதூா், கரைவலசு, பட்டத்திபாளையம், செம்மடை, புள்ளசெல்லிபாளையம்.