வெங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட கருணாகரச்சேரியில் ரூ.10.80 லட்சத்தில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வெங்காடு ஊராட்சிக்குட்பட்ட கருணாகரச்சேரியில் ஊராட்சி பொது நிதியின் மூலம் ரூ.10.80 லட்சத்தில் நியாயவிலைக் கடை கட்டடம் புதிதாக கட்டி முடிக்கப்பட்டது. இதையடுத்து ஊராட்சி மன்றத் தலைவா் அன்னக்கிளி உலகநாதன் கலந்து கொண்டு புதிய கட்டடத்தை திறந்து வைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு உணவு பொருள்களை வழங்கினாா். இந்த நிகழ்சச்சியில், ஸ்ரீபெரும்புதூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் மற்றும் ஏரிநீா்ப் பாசன சங்க தலைவா் வெங்காடு பி.உலகநாதன், ஊராட்சிமன்ற துணைத்தலைவா் தமிழ்செல்வி ரவிச்சந்திரன், வாா்டு உறுப்பினா்கள் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.