ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.குல்காம் மாவட்டத்தில் உள்ள நோவ்போரா அக்ரான் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இன்று பிற்பகல் 2.15 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.இதில், சிஆர்பிஎஃப்-ன் 46-வது படைப்பிரிவைச் சேர்ந்த 3 வீரர்கள் படுகாயமடைந்த நிலையில், அவர் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்கள் தலைமைக் காவலர் சோம்வீ, காவலர்கள் சந்தானோ மற்றும் ராகேஷ் தாஸ் என்று முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும், இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்ற பயங்கரவாதிகளை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.மேலும், குல்காம் மாவட்டம் முழுவதும் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.Terrorist attack in Jammu and Kashmir - 3 CRPF soldiers critically injuredஇரண்டு முறை புற்றுநோய் பாதிப்பு... முதன்முறையாக மனம் திறந்தார் சோனியா! சுயசரிதை புத்தகத்தில்