ஹார்ட் பீட் நாயகி தீபா பாலுவின் புதிய திரைப்படம் ’ஸ்டேஷன் - ஹண்ட் ஃபார் சர்வைவல்’ படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இதில் நாயகனாக அஜய் கார்த்தி நடிக்கிறார். ஹார்ட் பீட் இணையத் தொடரின் முதல் பாகம், இரண்டாம் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து மூன்றாம் பாகமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.அறிமுக இயக்குநர் மாறன் கார்த்திகேயன் இயக்கத்தில் இந்தப் பயம் உருவாக இருக்கிறது. ஒரே இரவில் நடக்கும் த்ரில்லர் கதையாக இந்தப் படம் உருவாக இருக்கிறது. இந்தப் படத்தில் ரொமான்ஸ், க்ரைம், ஆக்ஷன் கலந்த கதையாக உருவாக இருக்கிறது. இதில் நாயகனாக காளிதாஸ் 2, டார்க் படங்களில் அசத்திய அஜய் கார்த்திக் நாயகனாகவும் தீபா பாலு நாயகியாகவும் நடிக்கிறார்கள். கேபி இன்ஃபோடெயின்மென்ட் சார்பாக கே தினேஷ் குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் வெங்கடேஷ், தினேஷ் பிராபகர், ரமேஷ் திலக், அனு ஸ்ரீ வேலன், சப்பானி பாய்ஸ் முரளி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தின் முக்கியமான காட்சிகள் சுமார் 70 சதவிகிதம் காவல் நிலையத்தில் நடைபெறுவது போல படமாக்கப்படவிருக்கிறது. அதற்காக செட் ஒன்றையும் சென்னையில் அமைத்துள்ளார்கள். சுபாஷ் பாரதி ஒளிப்பதிவு செய்ய, அருண் ராஜ் இசையமைக்கவிருக்கிறார். தீபா பாலுவின் இந்தப் படத்தின் அறிவிப்பால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். View this post on Instagram இந்தியன் பனோரமா பிரிவில் திரையிட தேர்வாகியுள்ள துரந்தர், சர்வம் மாயா!Ajay Karthi, Heart Beat fame Deepa Balu to headline single-night thriller Station