மதுரையில் புதிதாகத் திறக்கப்பட்ட நகைக்கடையில் நடந்த திருட்டு வழக்கில் முக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. திருடன் நகைக் கடைக்கு ஸ்கூட்டியில் வந்த காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.மதுரையில் திறக்கப்பட்ட நகை கடையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் 15 கிலோவுக்கு மேல் தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர், நகைக் கடையிலிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் பறந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.மதுரை பழங்காநத்தம் பைபாஸ் சாலையில் செயல்பட்டு வரும் புதிய நகைக்கடையில் நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் மர்ம நபர் ஒருவர் புகுந்து 15 கிலோவுக்கு மேற்பட்ட தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றார். அதிகாலையில் நடைபெற்ற இந்தச் சம்பவம் மதுரை மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.9 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணைகொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரைப் பிடிப்பதற்காக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படையினர் இரவு முழுவதும் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.கொள்ளை நடந்த நகைக்கடையைச் சுற்றியுள்ள நேருநகர், மாடக்குளம், பழங்காநத்தம், நாகமலை புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.மேலும், ரயில் நிலையங்கள், போக்குவரத்து சிக்னல்கள், சுங்கச்சாவடிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் காவல்துறையினர் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.கொள்ளைக்கு முன்பே நோட்டமிட்ட மர்ம நபர்!இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் முக்கியத் திருப்பமாக, கொள்ளையில் ஈடுபட்ட நபர் கடந்த 5ஆம் தேதி அதிகாலை நேரத்திலேயே முகமூடி அணிந்து நகைக்கடைக்கு வந்ததாகவும், அப்போது கொள்ளையடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து கடையை நோட்டமிட்டுச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.இதனால், கொள்ளைச் சம்பவம் திடீரெனத் திட்டமிடப்பட்டதா அல்லது முன்கூட்டியே பல நாள்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஸ்கூட்டியில் வந்து ரயிலில் தப்பினாரா?கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஸ்கூட்டி மூலம் சம்பவ இடத்திற்கு வந்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படும் நிலையில், கொள்ளைக்குப் பிறகு ஸ்கூட்டியை வேறு இடத்தில் நிறுத்திவிட்டு ரயில் மூலம் மதுரையை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.இதன் அடிப்படையில், அதிகாலை நேரங்களில் மதுரையில் இருந்து புறப்படும் ரயில்கள் மற்றும் அவை செல்லும் வழித்தடங்கள் குறித்தும் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஊழியர்கள், பாதுகாவலர்களிடம் விசாரணைநகைக்கடையில் பணியாற்றிய ஊழியர்கள், தொழிலாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.ஹகொள்ளையன் தனி ஒருவனாகச் செயல்பட்டது போன்ற தோற்றம் இருந்தாலும், அதன் பின்னணியில் கொள்ளைக் கும்பல் ஏதேனும் செயல்பட்டுள்ளதா? அல்லது காவல்துறையினரின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகத் தனி நபர் கொள்ளையில் ஈடுபட்டாரா? என்பது குறித்தும் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.வடமாநிலங்களில் தேடுதல் வேட்டை?கொள்ளையில் ஈடுபட்ட நபர் வடமாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், வடமாநில காவல்துறையினரின் உதவியையும் மதுரை மாநகர காவல்துறையினர் நாடியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இதுவரை சுமார் 30 மணி நேரத்திற்கும் மேலாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும் கொள்ளையன் குறித்த உறுதியான தகவலோ, முக்கியத் தடயமோ கிடைக்காததால் தனிப்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் நேற்று அதிகாலை 3.34 மணிக்கு நகைக் கடையிலிருந்து அதன் அருகில் உள்ள நேரு நகர் சாலையில் நகைக் கடை கொள்ளையன் தனது இருசக்கர வாகனத்தில் விரைந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருக்கின்றன. Jewelry store heist in Madurai! Thief arrives on a scooter—CCTV footage causes a stir!