சத் பூஜை: நவம்பர் 16-இல் பள்ளிகளுக்கு விடுமுறை...எங்க தெரியுமா?

Wait 5 sec.

சத் பூஜையையொட்டி நவம்பர் 16-ஆம் தேதி தில்லியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகக் கல்வி இயக்குநரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.கல்வி இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தும் என்று அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.முன்னதாக நவம்பர் 9 பொது நிர்வாகத் துறை வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, பிரதிஹார் சஷ்டி அல்லது சூர்ய சஷ்டி (சத் பூஜை) தினமான நவம்பர் 16-ம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.துணைநிலை ஆளுநரின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில், தில்லி அரசின் கீழ் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.சூரிய பகவானை வணங்கும் சத் பூஜை வட மாநிலங்களில் நான்கு நாள்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் பூஜை தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து வரும் 6-வது நாளில் தொடங்கி அடுத்த 4 நாள்களுக்கு கொண்டாடப்படும். Schools in Delhi will remain closed on November 16 on account of Chhath Puja, according to a circular issued by the Directorate of Education on Friday.கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரத்தில் முதல்வர் மௌனம் கலைக்க வேண்டும்! அண்ணாமலை