எந்த கோயிலில் என்ன விசேஷம்?

Wait 5 sec.

தென்காசி மாவட்டம், ஆய்க்குடி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி, அருள்மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி பெருந்திருவிழாவில், நவம்பர் 15 }ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் ருத்ர ஏகாதசி, அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், மாலை 4 மணிக்கு மேல் சூரசம்ஹாரத்துக்கு வெள்ளிமலை வாகனத்தில் சுவாமி எழுந்தருளலும் நடைபெறும்.செங்கல்பட்டு டவுன், பெரிய நத்தம் அருள்மிகு ஸ்ரீ ஓசூர் அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நவம்பர் 22 }ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 முதல் 8 மணிக்குள்ளாக நடைபெற உள்ளது.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், சிக்கரசம்பாளையம் கிராமம், தனவாசி அருள்மிகு செல்வ விநாயகர், தனவாசி தனக்குமாரன், வள்ளி, தெய்வானை உடனமர் திருக்குமரன், இடும்பன், கடம்பன், கன்னிமார்கள், தனவாசி அப்பர் கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நவம்பர் 22 }ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 முதல் 9.30 மணிக்குள்ளாக நடைபெற இருக்கிறது.