திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகவல்லி நாகக்கன்னி உடனுறை இராகு பகவான் கோயிலில் ராகு-கேது பெயர்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, சுக்ல சதுர்த்தியும் வெள்ளிக்கிழமையும் பூராடம் நக்ஷத்ரமும் கூடிய சுபயோக சுபதினத்தில் மாலை மணி 05.14க்கு மேஷ லக்னத்தில் ஸ்ரீ ராகு பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசமானார். அதேபோன்று, ஸ்ரீ கேது பகவான் சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கு பிரவேசமானவார். இராகு - கேது பெயர்ச்சியை முன்னிட்டு இராகு பரிகார தலமான தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நாகவல்லி நாகக்கன்னி உடனுறை இராகு பகவானுக்கு மஞ்சள் சந்தனம் பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சரியாக 5.14 இராகு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. அதேபோன்று, ராகு-கேது பரிகாரத் தலமான ஸ்ரீ காளஹஸ்தி கோயிலிலும் ராகு-கேது பெயர்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2026! 12 ராசிகளுக்கும்!