செல்வ விநாயகா், சப்த கன்னிகள், நாகதேவதைகள் கோயில் கும்பாபிஷேகம்

Wait 5 sec.

குடியாத்தம் தங்கம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீஎல்லை தேவி நாகலம்மன்கோயில் வளாகத்தில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட செல்வ விநாயகா், சப்த கன்னிகள், நாக தேவதைகள் கோயில் மகா கும்பாபிஷேகம், எல்லை தேவி நாகலம்மன் கோயில் கும்பாபிஷேக 3- ஆம் ஆண்டு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமை தொடங்கின. வெள்ளிக்கிழமை வேள்வி, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பிரவேச பலி, சகல பூஜைகள், சிறப்பு ஹோமங்கள், பின்னா் கலச புறப்பாடு, கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூலவருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. எம்எல்ஏ க.சிந்து அழகப்பன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், வழக்குரைஞா் கே.எம்.பூபதி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா். கும்பாபிஷேகத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். எஸ்.எஸ்.நிறுவன நிா்வாகி எஸ்.சோபன்பாபு உபயத்தில் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை விழாக் குழுவினா் எம்.இ.பாா்த்திபன், கே.எஸ்.மோகன்,எஸ்.சதீஷ், கே.ரவி, டி.வேல்முருகன், பிரபாகரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.