சைக்கிள் கொள்முதல் விலை குறைப்புக்குப் பின்னணியில் ஊழலா? -மு. அப்பாவு கேள்வி

Wait 5 sec.

சைக்கிள் கொள்முதல் விலை குறைப்புக்குப் பின்னணியில் ஊழல் தானே? என முன்னாள் பேரவைத் தலைவா் மு.அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், நேரு பிறந்த நவம்பர் 14 அன்று தமிழக அரசால் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்ட கேக்கில் நேருவின் படம் இல்லாமல் விளம்பரத்திற்கு உங்கள் படம் போட்டு கொடுத்திருக்கிறீர்களே! நினைவிருக்கிறதா ! ஊரான் வீட்டு நெய்யில் உங்கள் ஸடீக்கர் ஓட்டலாமா CM sir ? தமிழ்நாட்டு மாணவ மாணவிகளுக்கு உங்கள் படம் போட்ட #கேக் முக்கியமல்ல உங்கள் கட்சிக்காரார்கள் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விஜய் படமில்லாமல் விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த #நடவடிக்கை எடுப்பீர்களா CM sir ? தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் சுமார் 5 லட்சம் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தில் மாணவர் சைக்கிள் ஒன்றிற்கு ரூ7,235 மாணவி சைக்கிள் ஒன்றிற்கு ரூ 7,476 என்றும் கொள்முதல் செய்ய 3 நிறுவனங்களுக்கு "நள்ளிரவு" கொள்முதல் உத்தரவு பிறப்பித்தது நினைவிருக்கிறதா CM sir ? தற்போது கோட்டையில் அதிகாரிகளோடு அமர்ந்து அதே சைக்கிள் கொள்முதல் செய்ய ரூ5,130, ரூ5,260 என விலை குறைய காரணம் என்ன ? அன்று 115 கோடி ரூபாய் அதிக விலையில் கொள்முதல் செய்ய உத்தரவிட்டது #ஊழல் தானே ? ஊழல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தூய ஆட்சி முன் வருமா CM sir ? எனத் தெரிவித்துள்ளார். Was there corruption behind the reduction in bicycle procurement prices? – Former Speaker M. Appavu raises a question.அரசுப் பள்ளி மாணவர்களுக்காக விலையைக் குறைத்த ஹீரோ சைக்கிள் நிறுவனம்!