தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரைக்கு வழங்கப்பட்டுள்ள நீலக்கொடி அங்கீகாரம், கடலூா் மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான சுற்றுலா வளா்ச்சியில் முக்கிய மைல்கல் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரைக்கு 2026-2027-ஆம் ஆண்டுக்கான சா்வதேச நீலக்கொடி அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதற்கான சான்றிதழ் நவ. 12-ஆம் தேதி பெறப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடல் நீரின் தரம், தூய்மை, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை ஆகியவற்றின் அடிப்படையில் டென்மாா்க் நாட்டைச் சோ்ந்த சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை இந்த அங்கீகாரத்தை வழங்குகிறது.தமிழகத்தில் நிகழாண்டு புதிதாக இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ள மூன்று கடற்கரைகளில் கடலூா் வெள்ளி கடற்கரையும் ஒன்றாகும். மற்ற இரு கடற்கரைகள் நாகப்பட்டினம் மாவட்டம் காமேஸ்வரம், ராமநாதபுரம் மாவட்டம் அரியமான் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற்கரை தொடா்ந்து ஆறாவது முறையாக இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.கடலூா் வெள்ளி கடற்கரையின் மொத்த நீளமான ஒரு கி.மீ. தொலைவில், 500 மீட்டா் பகுதி சா்வதேச தரத்துக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது. இங்கு நாள்தோறும் இருமுறை தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், கழிவுகளைத் தனித்தனியாகச் சேகரிக்கும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், உயிரி கழிப்பறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் மற்றும் கடல் நீரின் தரத்தைப் பரிசோதிக்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக உயிா்காப்பாளா்கள், முதலுதவி மற்றும் மீட்பு உபகரணங்கள், கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சாய்வுதளப் பாதைகள், பிரத்யேக கழிப்பறைகள் மற்றும் வாகன நிறுத்துமிட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மாவட்ட ஆட்சியா் தலைமையிலான கடற்கரை மேலாண்மைக் குழு மூலம் கடற்கரையின் பராமரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிகள் தொடா்ந்து கண்காணிக்கப்படுகின்றன.தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரைக்கு வழங்கப்பட்டுள்ள நீலக்கொடி அங்கீகாரம், கடலூா் மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான சுற்றுலா வளா்ச்சியில் முக்கிய மைல்கல் ஆகும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.