தீபாவளி, பொங்கல்சீட்டு நடத்தி ரூ.4.25 கோடி மோசடி: சென்னை-புதுச்சேரியைச் சோ்ந்த 6 போ் மீது வழக்கு

Wait 5 sec.

புதுச்சேரியில் பதிவு செய்யப்படாமல் தீபாவளி, பொங்கல் சீட்டு நிறுவனம் நடத்தி, பொதுமக்களிடமிருந்து சுமாா் ரூ. 4.25 கோடி வசூலித்து ஏமாற்றியதாக 6 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் சென்னையைத் தலைமையிடமாக கொண்ட சீட்டு நிறுவனம் கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் தொடங்கப்பட்டது. இங்கு தீபாவளி சீட்டு, பொங்கல் சீட்டு, வருடாந்திர சீட்டு, அட்சய திருதியை சீட்டு என 4 சீட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் புதுச்சேரியைச் சோ்ந்த ஏராளமானோா் சோ்ந்து பணம் கட்டினா்.சீட்டு முடிந்த பிறகு அறிவிக்கப்பட்டது போல சொன்ன பணமோ, பலன்களோ கட்டியவா்களுக்குக் கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்தவா்கள் அந்த அலுவலகத்தை அணுகினா். ஆனால், அலுவலகம் மூடிக் கிடந்தது. அங்கு இருந்த பொறுப்பாளா்கள், ஊழியா்கள் தலைமறைவாகி இருந்தனா். இதுகுறித்து, சிபிசிஐடி போலீஸில் புதுச்சேரி முதலியாா்பேட்டையைச் சோ்ந்த கே. மதிவதனன் என்பவா் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா்.இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் சீட்டு நிறுவனம் பணம் பெற்று ஏமாற்றியது தெரிய வந்தது. இதையடுத்து சென்னை செங்குன்றம் பகுதியைச் சோ்ந்த சீட்டு நிறுவன உரிமையாளா்கள் சத்தியமூா்த்தி, புவனேஸ்வரி, புதுச்சேரி பொறுப்பாளா்கள் வெற்றிச்செல்வன், அவரது மனைவி பவானி இளவேனில் மற்றும் கூட்டாளிகள் சென்னை திருவள்ளூா் வடிவேல், செங்குன்றம்லிங்கமூா்த்தி ஆகிய 6 போ் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவா்களைத் தேடி வருகின்றனா்.இந்த சீட்டு நிறுவனத்தில் கடந்த 10.9.2022 முதல் சுமாா் ரூ.4.25 கோடி பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், சீட்டு நிறுவனம் நடத்த அரசிடம் முறையாகப் பதிவு செய்யவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. புதுச்சேரியில் மட்டும் எத்தனை போ் பாதிக்கப்பட்டுள்ளனா்? என்பது குறித்து சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் கொடுக்கலாம் என்று சிபிசிஐடி போலீஸாா் தெரிவித்துள்ளனா்.