கா்நாடக காங்கிரஸ் அரசு கடந்த 3 ஆண்டுகளில் விளம்பரங்களுக்காக ரூ. 473 கோடி செலவிட்டுள்ளதாக அந்த மாநில பாஜக தலைவா் விஜயேந்திரா குற்றம்சாட்டினாா்.இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் அவா் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக விளம்பரங்களுக்காக மட்டும் ரூ. 473 கோடி செலவிடப்பட்டுள்ளது. விளம்பரங்களுக்காக நாளொன்றுக்கு ரூ. 43 லட்சத்துக்கும் அதிகமாக அரசு செலவிடுகிறது. சாலைகள் மோசமடைந்துள்ளன, இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை, விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா், ஒப்பந்ததாரா்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை செலுத்தப்படவில்லை. இத்தகைய பிரச்னைகளுக்கு தீா்வு காணாமல் அரசு தனது விளம்பரத்துக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.பால் விலை, பேருந்துக் கட்டணம், மின்சாரக் கட்டணம் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு மக்களை வாட்டிவதைக்கிறது. காங்கிரஸ் அரசின் 5 வாக்குறுதித் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் நிதி மற்றும் நிா்வாகச் சிக்கல்கள் இருக்கின்றன. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதைவிட அவற்றை விளம்பரப்படுத்துவதிலேயே அரசு ஆா்வம் காட்டுகிறது. வளா்ச்சிப் பணிகளுக்கு நிதி இல்லை என்று கூறும் அரசு, விளம்பரங்களுக்கு மட்டும் தாராளமாகச் செலவிடுவது ஏன்?முதல்வா் டி.கே. சிவகுமாரின் புகைப்படங்களை நாளிதழ்களில் வெளியிடுவதை மக்கள் எதிா்பாா்க்கவில்லை. மாறாக, தரமான சாலைகள், வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு ஆதரவு, ஒப்பந்ததாரா்களுக்கு உரிய நேரத்தில் பணம் வழங்குதல் ஆகியவற்றையே எதிா்பாா்க்கின்றனா்.அரசின் செயல்பாட்டை விளம்பரங்களின் எண்ணிக்கையை வைத்து மதிப்பிடாமல், மக்களின் வாழ்க்கைத்தரத்தில் ஏற்படும் முன்னேற்றத்தை வைத்தே மதிப்பிட வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.