சூரசம்ஹாரத்தை முன்னிட்டு முருகனின் நான்காம் படை வீடான சுவாமிமலையில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 15) பக்தர்கள் குவிந்தனர்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமி மலையில் முருகப்பெருமானின் நான்காம் படைவீடான சுவாமிநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இங்கு கந்த சஷ்டி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற உள்ளது. மேலும் இந்த சஷ்டியை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, மூலவர் சுவாமிநாத சுவாமி வைரவேல் மற்றும் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.கந்த சஷ்டி விழா: காலை முதலே முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள் சாமி தரிசனம்!On the occasion of Soorasamharam, devotees gathered on Sunday (Nov. 15) at Swamimalai—the fourth of Lord Murugan’s six abodes (Padai Veedu).