ரூ. 3,000 கோடி பழங்குடியினர் வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!

Wait 5 sec.

பழங்குடியினர் கௌரவ நாளை முன்னிட்டு, ரூ. 3,000 கோடி வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (நவ. 15) தொடக்கி வைத்தார்.சுதந்திரப் போராட்ட வீரரும், பழங்குடியினத் தலைவருமான பிர்ஸா முண்டாவின் 151-ஆவது பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமை (நவ.15) கொண்டாடப்படுகிறது. பிர்ஸா முண்டாவின் பிறந்த நாள், பழங்குடியினர் கெளரவ நாளாகக் கடந்த 2021-இல் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரத்தின் கட்சிரோலியில் நடைபெற்ற பழங்குடியினர் கௌரவ நாள் கொண்டாட்டத்தில் காணொளிக் காட்சி மூலம் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், சுமார் 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான 246 வளர்ச்சித் திட்டங்களை அவர் காணொளிக் காட்சி வாயிலாகத் தொடக்கி வைத்தார். இதில், பழங்குடியினரின் கல்வி, சுகாதாரம், வாழ்வாதார வாய்ப்புகள், சமூக உள்கட்டமைப்பு சார்ந்த திட்டங்கள் அடங்கும்.அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:2021 நவம்பர் 15 முதல் பழங்குடியினர் கௌரவ நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று, இது ஒரு நாடு தழுவிய கொண்டாட்டமாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு, பிர்சா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நக்சலிசத்திலிருந்து விடுதலை பெற்றது நாட்டின் சாதனைகளில் ஒன்றாகும். கட்சிரோலி உள்பட, நாட்டின் பழங்குடியினப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின சமூகத்தையே நக்சலிசம் அதிகம் பாதித்தது என்பதை அறிவோம்.ஆனால், அந்தக் காலகட்டங்களில் நக்சலிசத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அப்போதைய அரசாங்கத்தால் கைவிடப்பட்டனர். அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. அனைவரும் மௌனம் காத்தனர். பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்கக்கூட அனுமதிக்கப்படவில்லை. இன்று, நக்சலிசம் ஒழிக்கப்பட்ட நிலையில், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த தாய்மார்களும் சகோதரிகளும் எங்களை ஆசிர்வதிக்கிறார்கள்.இன்றைய காலக்கட்டத்தில் நாட்டின் முன்னேற்றத்துக்கு பழங்குடியினர் சமூகம் பங்களித்து வருகிறது. இன்று, நாட்டைப் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் வழிநடத்துகிறார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நினைத்து நாம் அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடு தெரிவித்தார்.ரூ. 3,000 கோடி பழங்குடியினா் திட்டங்கள்: இன்று தொடங்கிவைக்கிறாா் பிரதமா் மோடிOn the occasion of Tribal Pride Day, Prime Minister Narendra Modi launched development projects worth Rs 3,000 crore on Sunday (Nov. 15).