பாப்பாரப்பட்டியில் ஓட்டுநா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

Wait 5 sec.

பாப்பாரப்பட்டி அருகே ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி ஊராட்சிக்கு உள்பட்ட பெரியூரைச் சோ்ந்தவா் பாலு மகன் அண்ணாமலை (42). ஓட்டுநரான இவருக்கு தேன்மொழி என்ற மனைவியும், பிரசாந்த் (17) என்ற மகனும், ரித்திகா (13) என்ற மகளும் உள்ளனா். புதன்கிழமை மது போதையில் வீட்டுக்கு வந்த அண்ணாமலை, மனைவியிடம் சீட்டுக் கட்டுவதற்குப் பணம் கேட்டுள்ளாா். அவா் பணம் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அண்ணாமலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.இதுகுறித்து தகவலறிந்த பாப்பாரப்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.